Wednesday, March 16, 2011

மாணவியின் பிறந்தநாளுக்கு பேஸ்புக் வாயிலாக வந்த 1.8 இலட்சம் விருந்தினர்கள்! மிரண்டு போன குடும்பத்தினர்


ஆஸ்திரேலியாவின் 15 வயது மாணவி ஒருவர் தனது பிறந்தநாள் விழாவுக்கு தனது நெருங்கிய நண்பர்களை மட்டும் பேஸ்புக் வாயிலாக அழைத்த போது, பேஸ் புக் வாயிலாக அனுப்பியதால் 1 லட்சத்து 80 ஆயிரம் விருந்தினர் கலந்துகொள்ள வருவதாக பதில் வந்‌தததையடுத்து மிரண்டு போன மாணவி தனது பிறந்த நாளை ரத்துசெய்துவிட்டார்.

ஆஸ்தி‌ரேலியாவின் நியூ செளத்வேல்ஸ் மாகாணத்‌தில் உள்ள சாட்ஸ்வுட் நகரி்ல் வசித்து வந்த ஜெஸ் (15) என்ற மாணவி தனது பிறந்த நாளை கொண்டாட தனது நெருங்கிய நண்பர்கள் 10 பேருக்கு சமூக வ‌‌லை தளமான பேஸ்புக் வாயிலாக அழைப்ப விடுத்திருந்தார்.

அழைப்பு விடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாக பேஸ் புக்கி‌னை திறந்து‌ பார்த்த போது ஜெஸ் அதிர்ச்சியடைந்தார்.

ஏறத்தாழ 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பிறந்த நாள் விழாவி்ல் கலந்துகொள்ள இருப்பதாகவும், பிறந்த நாள் பரிசாக ரூ. 15.59 டாலர் அளவுக்கு பொருட்கள் இருந்ததாகவும் பதில் வந்தது.

வெறும் 10 நண்பர்களுக்கு அனுப்பிய தகவல் 20 ஆயிரம் பேருக்கு எப்படி பேஸ்புக் வாயிலாக பரவியது என தெரியாமல் திகைத்தார்.

இது குறித்து அவரது ஜெஸ்ஸின் தந்தை கூறுகையில், 500 விருந்தினர்களை மட்டும் தான் எனது மகள் பிறந்த நாள் விழாவுக்கு, பேஸ் புக் விளம்பரம் வாயிலாக அழைத்திருந்தேன்.

ஆனால் அது 1லட்சத்து 80 ஆயிரம் பேரை அழைத்ததாக பதில் வந்திருப்பது மோசடி வேலை தான், இதில் என் மகள் எந்த தொடர்பும் இல்லை.

இவளது பேஸ் புக் கணக்கினை யாரே தவறாக பயன்படுத்தி இப்படி ஒரு ‌காரியத்தினை செய்துள்ளனர். பிறந்த நாள் கொண்டாடுவதை ரத்து செய்துவிட்டோம் என்றா

No comments:

Post a Comment