அதிநவீன துப்பாக்கி சகிதம் இறுதிவரை இலக்கை எட்டாத புலிகளின் 1 படையணி.


விடுதலைப் புலிகள் மிகவும் பலம் பொருந்திய கொரில்லா அணியாக இருந்து, பின்னர் மரபு வழி இராணுவமாக மாறி இலங்கையில் வன்னி பெரு நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அவ்வமைப்பிடம் பல நவீன ரக ஆயுதங்கள், தளபாடங்கள் இருந்திருக்கிறது. ஆனால் P90 என்று அழைக்கப்படும் பிராஜக்ட் 90 ரக துப்பாக்கிகள் புலிகள் இயக்கத்தில் சுமார் 4 தொடக்கம் 5 துப்பாக்கிளே இருந்ததாகக் சொல்லப்படுகிறது. சுமார் 90 ரவைகள் போடக்க்கூடிய இந்தத் துப்பாக்கிகள் சகிதம் புறப்பட்ட ஒரு பகுதியினர் இராணுவத்தின் தாக்குதலில் சிக்கி இறந்துள்ளதாக தற்போது கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் ஒரு இலக்கை நோக்கி நகர்ந்ததாகச் சொல்லப்படுகிறது.

மே 16ம் திகதி புலிகளின் சில சிரேஷ்ட்ட உறுப்பினர்களோடு, புறப்பட்ட இந்தப் படையணியை இராணுவம் எதிர்பார்க்காத வகையில் சுற்றிவளைத்துள்ளது. அதில் நடந்த வீரச்சமரில் புலிகளின் பல சிரேஷ்ட தளபதிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் இவர்கள் யார் யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை. புலிகளின் வேவு பார்க்கு அணியினர் முதலில் ஊடுருவி அந்த இடம் தொடர்பாக தமது தகல்களை வழங்க, கனரக ஆயுதங்களை இலகுவாக நகர்த்த அவற்றை பாகம் பாகமாகப் பிரித்து, எடுத்துச் சென்றுள்ளனர் புலிகள். இந்த இடத்தில் புலிகள் ஊடுருவ உள்ளதை எவ்வாறோ அறிந்த இராணுவம் அவ்விடம் நோக்கி பல முனைகளில் தாக்குதலைத் தொடுத்துள்ளது.

இந்த அதிர்ச்சித் தாக்குதல் காரணமாக புலிகளின் இந்த குறிப்பிட்ட அணியினர், அனைவரும் உயிரிழந்துள்ளனர். கொண்டு சென்ற கனரக ஆயுதங்களை அவர்கள் மீண்டும் பொருத்தி பாவிக்க முன்னரே அனைவரும் இறந்துபோய் உள்ளதாக அறியப்படுகிறது. பலத்த காட்டிக்கொடுப்புகளுக்கு மத்தியில் மிகவும் சாதூரியமாக பாதை ஒன்றைக் கண்டறிந்தே அவர்கள் அதனூடாக இராணுவ முற்றுகையில் இருந்து தப்பிக்க முனைந்திருக்கின்றனர். இருப்பினும் இந்த அணி இறுதிவரை அவர்கள் இலக்கை எட்டவில்லை எனக் கூறப்படுகிறது.
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment