Thursday, February 17, 2011

பிறந்த இடத்திற்கே திரும்பினார் சிட்டி ரஜினி!


சூப்பர் ஸ்டார் ரஜினியின் அசத்தல் நடிப்புக்கு ஆயிரம் உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். என்றாலும், `எந்திரன்` படத்தில் வரும் சிட்டி கேரக்டர்தான் பல நாட்டு ரசிகர்களையும் பரபரப்புக்கு ஆளாக்கியது! அப்படத்தில் கம்ப்யூட்டர் மனிதராக நடித்த ரஜினிக்கு நடிப்பு இன்ஸ்பிரேஷனாக அமைந்த பொம்மை வாத்தியார்தான் இந்த சிட்டி.

இந்த சிட்டியை வடிவமைத்தது லாஸ் ஏஞ்சல்சில் உள்ள ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டுடியோ. இந்த ஸ்டுடியோவில் உள்ள லெக்ஸி எபெக்ட்ஸ் என்னும் பிரிவில் நு£ற்றுக்கும் மேற்பட்ட தொழில் நுட்ப வல்லுனர்கள் அரும்பாடு பட்டு உருவாக்கிய இந்த ரோபோ, தனது உடன்பிறப்புகளுடன் போய் சேர்ந்து விட்டது.

இன்னும் விளக்கமாக சொன்னால், இதே ஸ்டுடியோவில் உருவாக்கப்பட்ட ஹாலிவுட் பட பாத்திரங்களான டெர்மினேட்டர், அயர்ன்மேன், அவதாரில் நடித்த போர் இயந்திரங்கள் ஆகியவைதான் இந்த சிட்டியின் உடன்பிறப்புகள்.

இந்த ரோபோ தங்கள் ஸ்டுடியோவுக்கு வந்து சேர்ந்ததும், மற்ற ரோபோக்களுடன் இதையும் நிற்க வைத்து படம் எடுத்து தள்ளினார்களாம் ஸ்டுடியோக்காரர்கள். ஊருக்கு போயிருந்த குழந்தை திரும்பி வந்துவிட்டதே என்ற சந்தோஷம்தான் அது!

இந்த ரோபோவை உருவாக்கிய தொழில் நுட்ப வல்லுனர்களின் பேட்டியை டிவிடிகளாக வெளியிடப் போகிறோம் என்று ப்யூஷன் எட்ஜ் மீடியாவின் நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான ஜாக் தெரிவித்தார்.

ரொம்ப ஆவலாக காத்திருக்கிறோம் ஜாக்!

சும்மா போனா எப்படி ???ஒரு ஓட்டு பொட்டுட்டு போங்க.................

No comments:

Post a Comment