Friday, February 18, 2011

மாதவனை உற்சாகப்படுத்திய நடிகை!!


லிப்’ காட்சியில் தயங்கித் தயங்கி நின்றார் மாதவன். ‘பயப்படாதீங்க.. தைரியமா நடிங்க’ என்று தைரியம் கொடுத்து நடிக்க வைத்தார் ஹீரோயின் கங்கனா ரனாவத். மாதவன் நடிக்கும் இந்தி படம் ‘தனு வெட்ஸ் மனு’. லண்டனில் படிப்பை முடித்துவிட்டு கிராமத்துக்கு வருகிறார் மாதவன். அங்கு கங்கனாவை பார்த்ததும் காதல் வருகிறது.

அவரையே மணக்க முடிவு செய்கிறார். அதற்கு அச்சாரமாக உதட்டில் முத்தம் தரும் காட்சி. இதை படமாக்க திட்டமிட்டார் இயக்குனர் ஆனந்த் எல்.ராய். காட்சிக்கு தயாராக கங்கனா படுத்திருக்க, தயங்கித் தயங்கி நின்றுகொண்டிருந்தார் மாதவன். ‘இத்தனை பேரு சுத்தி நிக்கிறாங்க. பழக்கமில்லாத நடிகை. முத்தம் கொடுக்க கூச்சமாக இருக்கிறது.

இதுவரை இப்படி நடித்ததில்லை’ என்றார் மாதவன். ‘லிப் டு லிப்’ காட்சி வைத்தே ஆகவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் டைரக்டர். இருவரும் வாக்குவாதம் செய்வதை அறிந்து எழுந்து வந்தார் கங்கனா. மாதவன் அருகில் சென்றார். ‘நடிப்பில் முத்தக் காட்சியும் ஒரு சீன்.

இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது. தப்பாக நினைக்கமாட்டேன். டைரக்டர் சொல்வதுபோல் தைரியமாக நடியுங்கள்’ என்று தைரியம் சொன்னார்.பின்னர் காட்சி படமாக்கப்பட்டது. முத்தக்காட்சி சூப்பராக அமைந்ததாக டைரக்டர் சொல்கிறார். மாதவனோ, இக்காட்சியில் முத்தம் தரவே இல்லை என்கிறார்.


சும்மா போனா எப்படி ???ஒரு ஓட்டு பொட்டுட்டு போங்க.................

No comments:

Post a Comment