Sunday, February 20, 2011
ரஜனியுடன் மூன்று நாயகிகள் - அசின் கூட நடிப்பாரா ரஜனி?
எந்திரனுக்கு பிறகு ரஜினி “ராணா” என்ற படத்தில் நடிக்கப் போவதாக அறிவிப்பு வந்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிறது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். இதில் மூன்று வேடங்களில் ரஜினி நடிக்கிறார்.
இளம் வயது ரஜினிக்கு ஜோடியாக நடிக்க பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனே தேர்வு செய்துள்ளனர். ரஜியுடன் நடிப்பது பெருமையாக உள்ளது என்று அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மற்ற இரு ரஜினிக்கும் ஜோடிகளாக அனுஷ்கா, அசின் நடிப்பார்கள் என செய்தி வெளியாகியுள்ளது.
இவ்விருவரையும் படக் குழுவினர் அணுகி பேச்சு நடத்துவதாக கூறப்படுகிறது. ரஜினி ஜோடியாக அசின் நடிப்பதற்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கைக்கு நடிகர், நடிகைகள் செல்லக்கூடாது என்று திரைப்பட கூட்டுக்குழு தடை விதித்தது.
ஆனால் அதை மீறி அசின் இலங்கை சென்று தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்பட்டார். இதற்காக “காவலன்” படத்தில் அவர் நடித்த போதே எதிர்த்தோம். அந்த படம் 40 சதவீதம் முடிந்ததால் நீக்க இயலாது என்றும் அடுத்த படத்தில் அசினை ஒப்பந்தம் செய்ய மாட்டோம் என்றும் தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டது.
இதனால் போராட்டத்தை கைவிட்டோம். தற்போது ரஜினி ஜோடியாக அசின் நடிக்கப் போவதாக வெளியாகும் செய்திகள் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. அவரை ஜோடியாக்க ரஜினி சம்மதிக்க கூடாது எங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டல் பட பூஜையில் புகுந்து போராட்டம் நடத்து வோம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment