Friday, February 25, 2011

லண்டனில் தாய்ப்பால் மூலம் தயாரான ஐஸ்கிரீம் விற்பனை


லண்டன், பிப். 25-

ஐஸ்கிரீம்கள் பால் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. தற்போது இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தாய்ப் பாலில் இருந்து புது விதமான ஐஸ்கிரீம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு “பேபி ககா” என பெயரிடப்பட்டுள்ளது.

இதன் விற்பனை இன்று முதல் தொடங்குகிறது. அவற்றின் விலை ரூ.1000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது லண்டனில் உள்ள கோவன்ட் கார்டன் என்ற ஓட்டலில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை மாட் ஓ கார்னர் என்பவர் தயாரித்துள்ளார். ஐஸ்கிரீம் தயாரிப்பதற்கான தாய்ப்பால் 15 பெண்களிடம் இருந்து பெறப்படுகிறது. இதற்காக போரம் மம்ஸ் நெட் என்ற இன்டர்நெட் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டது.

அதை பார்த்ததும் லண்டனை சேர்ந்த விக்டோரியா ஹிலே (35) என்பவர் உள்பட மற்ற பெண்கள் தாய்ப்பால் வினியோகம் செய்தனர். தாய்ப்பால் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள ஐஸ்கரீம் சத்தானதாக இருக்கும். எனவே இதை வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-இந்தியாவின் No.1 மாலை நாளிதழ்-

No comments:

Post a Comment