Tuesday, February 22, 2011

உலகின் மிக மோசமான தலைநகரம் கொழும்பு! பிரித்தானிய சஞ்சிகை கணிப்பு


உலகில் மிக மோசமான நிலையில் உள்ள பத்து தலைநகரங்களில் கொழும்பும் ஒன்று என்று பிரித்தானிய தலைநகர் லண்டனில் இருந்து வெளியாகின்ற் The Economist சஞ்சிகை தெரிவித்து உள்ளது.இச்சஞ்சிகை சுகாதாரம், கலாசாரம், சுற்றாடல், கல்வி, தனி நபர் பாதுகாப்பு ஆகியன உட்பட 30 அம்சங்களின் அடிப்படையில் மிகவும் சிறந்த பத்து தலைநகரங்களையும், மிகவும் மோசமான நிலையில் உள்ள பத்து தலைநகரங்களையும் தெரிவு செய்து வைத்து உள்ளது.

மிக மோசமான நிலையில் உள்ள 10 தலைநகரங்களுக்குள்ளும் மிகவும் கேவலமான நிலையில் இலங்கை உள்ளது என்கிறது இச்சஞ்சிகை.

மிகவும் மோசமான நிலையில் உள்ள தலைநகரங்கள் என்று இச்சஞ்சிகையால் அடையாளம் காணப்பட்டு இருப்பவை வருமாறு:-

01) Harare - Zimbabwe
02) Dhaka - Bangladesh
03) Port Moresby - Papua New Guinea
04) Lagos - Nigeria
05) Algiers - Algeria
06) Karachi - Pakistan
07) Douala - Cameroon
08) Tehran - Iran
09) Dakar - Senegal
10) Colombo - Sri Lanka

No comments:

Post a Comment