Wednesday, February 23, 2011

11 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர் கண்டுபிடிப்பு


பயங்கரமான தசைகள் கொண்ட புதிய டைனோசர் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. "இடி ஓசை தொடைகள்" என அழைக்கப்படும் புதிய டைனோசர் யு.எஸ்.ஏ வில் உள்ள யுடாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த ஆய்வு அறிக்கை ஆக்டா பாலேன்டோ லோஜிகா இதழில் வெளியிடப்பட்டுள்ளது. பிரிட்டன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வு அறிக்கையை சமர்பித்துள்ளனர்.

நீண்ட கழுத்து உடைய பல்லியின டைனோசர் வகையை சேர்ந்ததாக இந்த டைனோசர் உள்ளது. இது 11 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தது ஆகும். பெரிய மற்றும் சிறிய டைனோசர்களின் எலும்பு படிவங்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பெரிய டைனோசர் எடை ஏறக்குறைய 6 டன் எடை கொண்டதாகவும், 14 மீற்றர் நீளம் கொண்டதாகவும் இருக்கும் என ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். இந்த டைனோசர் ஒரு பெரும் யானையை ஒத்ததாக உள்ளது.

பெரிய டைனோசரின் உருவத்தில் 3 ல் ஒரு பங்கு கொண்டதாக குட்டி டைனோசர் உள்ளது. இதன் எடை 200 கிலோவும், 4.5 மீற்றர் நீளம் கொண்டதாக இருந்துள்ளது. பல்லியின டைனோசர் குடும்பத்தில் மிகப் பெரிய தொடை கொண்டதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள டைனோசர் உள்ளது என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

No comments:

Post a Comment